• திருவலிவலம் மனத்துணைநாதர் கோவில் - கோபுரவாசல்

எங்கள் ஆதிசிவன் அரும்பெரும் கடவுள்

சிவனோடொக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
தவனச் சடைமுடி தாமரையானே

பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி

தென்னாடு ஐம்பூதநாதர் திருப்பாதங்கள் போற்றி

அடுத்துவரும் நிகழ்வுகள் செந்தமிழாக சிவமடம் ,கொக்குவில் கிழக்கு கொக்குவில்

சிறப்புப் பதிவுகள்

தென்புலத்தார் வழிபாடு – மறைமதி (அமாவாசை) தினத்தில் தென்புலத்தார் வழிபாடு மற்றும் பேரொடுக்கம் (மகாலய அமாவாசை)

தென்னாட்டுத் திண்ணை

தெய்வத்தமிழின் தொன்மை பெருமை

மற்றுநீ வன்மை பேசி வன்றொண்டன் என்னும் நாமம்,
பெற்றனை நமக்கு மன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க,
அற்சனை பாட்டே யாகும் ஆதலான் மண்மேல் நம்மைச்,
சொற்றமிழ் பாடு கென்றார் தூமறை பாடும் வாயார்.

தெய்வக்கூற்றாக சேக்கிழார்

மன்னுமாமலை மகேந்திரமதனிற் சொன்ன ஆகமந் தோற்றுவித்தருளியும்

மாணிக்கவாசகர், திருவாசகம்

பஃறுளி யாற்றுடன் பன் மலை அடுக்கத்துக்,
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள,
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு,
தென்திசை ஆண்ட தென்னவன் வாழி.

இளங்கோவடிகள்

மதிமலி புரிசை மாடக் கூடல்,
பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிறகு,
அன்னம் பயில்பொழில் ஆல வாயில்,
மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்…

ஆலவாயண்ணல் தமிழில்

கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோடு அமர்ந்து பண்ணுறத் தெரிந்தாய்ந்த இப்பசுந்தமிழ்

பரஞ்சோதி முனிவர்

மலிதிரை ஊர்ந்துதன் மண்கடல் வௌவலின்,
மெலிவின்றி மேற்சென்று மேவார் நாடு இடம்படப்,
புலியொடு வில் நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை,
வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்.

கலித்தொகை

மாதவம் செய்த தென்திசை வாழ்ந்திடத்,
தீதிலாத் திருத்தொண்டத் தொகை தரப்,
போதுவான் அவர் மேல் மனம் போக்கிடக்,
காதல் மாதரும் காட்சியில் கண்ணினார்.

தெய்வக்கூற்றாக சேக்கிழார்

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

திருவள்ளுவர் , திருக்குறள்

முன்புநீ நமக்குத் தொண்டன் முன்னிய வேட்கை கூரப்,
பின்புநம் ஏவலாலே பிறந்தனை மண்ணின் மீது,
துன்புறு வாழ்க்கை நின்னைத் தொடர்வறத் தொடர்ந்து வந்து,
நன்புல மறையோர் முன்னர் நாந்தடுத் தாண்டோ.

கிருபாபுரீசர் (சிவன்) தமிழில்

ஞாலம் அளந்த மேன்மைத் தெய்வத் தமிழ்

சேக்கிழார்

கண்ணாய் ஏழுலகும் கருத்தாய் அருந்தமுமாய்ப்
பண்ணார் இன்தமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே

சுந்தரர்

தமிழ் சிவம் இனிமை எனும் தமிழ்ப் பொருளாம்

கழாரம்பர், பேரிசை

நிழல்பொலி , கணிச்சிமணி நெற்றி , உமிழ் செங்கண், தழல்புரை சுடர்க்கடவுள் தந்த தமிழ்

கம்பர்

வாழும்போது வாழ்த்துவோம்

சோழர்கால வாரிவனேசர் மீண்டும் சாவகச்சேரியின் மத்தியில் எழுந்தருளல்

The temple of Chola-time Varivanesar is restored in the middle of Chavakacheri again to shower abundance of divine grace to the land. சிவபூமியென்று புகழப்படும் இலங்கையில், இராவணன் காலத்தில் இருந்தே பல சிவன் கோவில்கள் இருந்துள்ளன. முன்னைய காலங்களில் அடியார்கள் தாமாகவே செந்தமிழில் ஆடல்வல்லானை வணங்கி அருளுடன் ஆற்றலும் ஆட்சியும் பெற்று வாழ்ந்தனர். அந்தவகையில் விருபாக்கன் என்பவரினால்

தென்னாடு தொலைவலைக்காட்சி காணொளிகள்

குழந்தைப்பேறு கிடைக்கபாட வேண்டிய திருமுறைகள்

கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்
பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டுஞ் சடையானும்
பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டுங் கொடியானே

விதிமாற்றும் விரிசடையான் – திருமுறைகள்