மாணிக்க
  வாசகர்
மன்னுமாமலை மகேந்திரமதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித்தருளியும்
  திருமூல
  நாயனார்
முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை
எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை
நெய்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன்
அத்தகு சோதியது விரும்பாரன்றே
  திருஞான
  சம்பந்தர்
மற்றுநீ வன்மை பேசி வன்றொண்டன் என்னும் நாமம், பெற்றனை நமக்கு மன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க, அற்சனை பாட்டே யாகும் ஆதலான் மண்மேல் நம்மைச், சொற்றமிழ் பாடு கென்றார் தூமறை பாடும் வாயார்
  பரஞ்சோதி
  முனிவர்
கண்ணுதற்பெரும் கடவுளும் கழகமொடு அமர்ந்து. பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த இப்பசுந்தமிழ் என
மண்ணிடைச்சில இலக்கண வரம்பிலா மொழிகள்போல். எண்ணிடைப்படக்கிடந்ததா எண்ணவும் படுமோ
   திருஞான
  சம்பந்தர்
நாறு பூம்பொழில் நண்ணிய காழியுள்
நான்ம றைவல்ல ஞானசம் பந்தன்
ஊறும் இன்தமி ழால்உயர்ந்
தார்உறை தில்லைதன்னுள்
ஏறு தொல்புகழ் ஏந்துசிற் றம்பலத்
தீச னைஇசை யாற்சொன்ன பத்திவை
கூறு மாறுவல் லார்உயர்ந்
தாரொடும் கூடுவரே.
  சம்பந்தர்
செந்தமிழர் தெய்வமறை நாவர் செழுநற்கலை தெரிந்தவவரோ
டந்தமில்கு ணத்தவர்க ளர்ச்சனைகள் செய்யவமர் கின்றவரனூர்
கொந்தலர்பொ ழிற்பழன வேலிகுளிர் தண்புனல்வ ளம்பெருகவே
வெந்திறல்வி ளங்கிவளர் வேதியர்வி ரும்புபதி வீழிநகரே
  அப்பர்
 
சலம்பூவோடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன்னாமம் என்னாவில் மறந்தறியேன்
உலர்ந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய்
உலடலுள்ளூறு சூலை தவிர்த்தருளாய்
அலந்தேன்அடி யேன் அதிகைக்கெடில
வீராட்டனத்துறை அம்மானே.